ஹரே ராம ஹரே ராம !
ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண !
கிருஷ்ண கிருஷ்ண !
ஹரே ஹரே !
குருவே நமஹ !
குருவின் குருவே நமஹ !
அவதாரம் பலபூண்டு !
ஆலிலை கண்ணனாய் வந்து !
அண்ணாவாய் நாமம் கொண்டு !
ஆழியாய் இறை தொண்டு !
அயரா மனம்கொண்டு !
அகிலம் சிறக்க தந்து !
புரவி ஓட்டிய கண்ணணாய்
யம்மன குதிரையை பூட்டி !
பக்குவமாய் பாசமுடன்
இழுத்து செலுத்தி !
பகவானை நோக்கி !
யம்மனங்களில் ராமநாமம்
வானின் நீர்வீழ்ச்சியாய்
பொழியவைத்தாயே !
வேதமழை பொழிந்து !
வேதநூல்கள் தந்து !
வேத சிம்மாசனத்தில்
வீற்றிருக்கும் வியாசரே !
படைப்பை கடந்து தம்
படைப்பு பாரிலே
பரவி பரந்தாமன்
புகழ்பாடுதே பகவானே !
பகவான் யோகிராம் கண்ட
குழல் ஊதும் கண்ணா !
குழந்தை சிரிப்பு அண்ணா !
தென்னகத்தே பரனூரில்பக்த
கோலாகலனுக்கு கோவில்கட்டி !
அகம்மகிழ்ந்து போனாயே
அவனிடம் சொல்லி சென்றாயோ?
பூலோக வைகுண்டமே !
வைகுண்டம் சென்றதேனோ?
வைகுண்டத்தில்
தாயார் அழைத்தாரோ?
ஸ்ரீரங்கா உனைக்கானவே !
ஆதிசேசன் அழைத்தானோ?
அவன்மடியிலே தாம்உறங்க !
யம் குருவின் குருவே !
மனிதத் தோலை தம்
மேனியில் போர்த்தியதால்
ஆடை கலைந்தாயோ!
அறிவுக்குத் தெரியுது தாம்
கண்ணனே என்று !
ஆனாலும் பேதை மனமோ
கண்ணீரை பெருக்குது !
எம்மால் முடியவில்லை !
எம்மனம் தாளவில்லை !
எம்குருவின் மனமோ
என்னபாடு படுமோ ?
யாம்அறியோம் பராபரமே!
ஆறுதல் அவறுக்களிக்க
உனைத்தவிர வேறுளரோ !
செங்கனூர் சேத்திரத்தில்
கண்ணனுக்காக கண்ணனே
ஓதுகிறார் அகண்டநாமா !
அனைவரும் ஓதுங்கள்
அண்ணாவின் மனம்குளிர !
ஒருமுறைகூட நினை யான்
தரிசிக்கும் பாக்கியம்
பெற்றதில்லை பகவானே!
புவியில் தாம்பூத்த காலத்தே !
யமை பூக்க வைத்தாயே !
யாம்செய்த பாக்கியம் என்னவோ !
செங்கனூர் நாயகனே !
யமக்கு அருள் புரிவாயே !
குருவே போற்றி !
குருவின் குருவே போற்றி !
பிரேமிக்கவரதா போற்றி !
ஸ்ரீரங்கநாதா போற்றி !
ஆலிலை கண்ணா !
போற்றி ! போற்றி !
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா பகவானின்
திருப்பொற்பாத கமலங்களில் சமர்ப்பனம்
—ஸ்ரீதர் சண்முகம் (Sridar Shanmugam)
-டொரண்டோ. கனடா (Toronto, Canada)